தானமாக வழங்கப்பட்ட முதியவரின் கண்கள். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 2 April 2024

தானமாக வழங்கப்பட்ட முதியவரின் கண்கள்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த தரணம்பேட்டை, நீலி கோவிந்தப்ப வீதியை சேர்ந்த ராஜா ஜூவல்லரி உரிமையாளர் ஆர்.என்.ராஜாவின் தந்தை கே.எஸ். ராமலிங்கம் (வயது87) இன்று மாலை 4 மணிக்கு வயது முப்பின் காரணமாக இயற்கை எய்தினார். இவரது கண்கள், மகன் மற்றும் குடும்பத்தார் ஒப்புதலுடன் வேலூர் டாக்டர் அகர்வால் கண்மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது. 

இது குறித்து முதல் தகவல் சங்க மூத்த உறுப்பினர் டாக்டர் எம்.எஸ்.திருநாவுக்கரசு தந்தார்.இதற்கான ஏற்பாடுகளை சங்க கண் மற்றும் உடல் தானக்குழு தலைவர் எம்.ஆர்.மணி  மற்றும் மகன் குடும்பத்தார் உடன் இருந்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad