வேலூர் மாவட்டம் 23 வது வார்டு உட்பட்ட கொசப்பேட்டை குமணன் தெரு பகுதியில் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக அப்பகுதி மக்கள் மிகவும் மன வேதனை அடைகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர் தனி பிரிவுக்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் தபால் மூலமாகவும் புகார் மனு அனுப்பப்பட்டது.
இதுவரை இப் புகார் மனுவை ஏற்று எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையாக கருதி நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மண்ணில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் கதிர் ஆனந்த் வேலூர் எம் எல் ஏ ப.கார்த்திகேயன் அணைக்கட்டு எம்எல்ஏ ஏபி நந்தகுமார் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் துணை மேயர் சுனில் குமார் இவர்கள் அனைவரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் முக்கிய பொறுப்பாளர்கள் ஆவார்கள். இன்னும் இம்மண்ணில் இதுபோன்ற பிரச்சனைகள் வருவது பொதுமக்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.
அரசு அதிகாரி மாநகராட்சி கமிஷனருக்கும் பொறுப்பாளர் சிவக்குமார் அவர்களுக்கும் புகார் தெரிவிக்கப்பட்டு குடிநீரால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவ அதிக வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் அச்சப்படுகின்றனர் இவற்றை மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்கள் கோரிக்கையும் அச்சங்களையும் போக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களின் சார்பாகவும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு
- வேலூர் மாவட்ட தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment