குடியாத்தம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 293 வாக்குப்பதிவு மையங்கள் உள்ளன இம்மையங்களுக்கு சுமார் 348 விவி பேட் வாக்குப்பதிவு எந்திரங்களில் இன்று வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப்பட்டன. இதில் உதவித் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் சின்னங்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணிகளை தேர்தல் பொறுப்பாளர் ரூபேஷ் குமார் I A S இன்று பார்வையிட்டார்.
உடன் குடியாத்தம் வட்டாட்சியர் சித்ராதேவி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நரசிம்மன் பேர்ணாம்பட்டு சமூக பாதுகாப்பு சட்ட வட்டாட்சியர் கலைவாணி குடியாத்தம் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் வடிவேலு பேரணாம்பட்டு தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பலராமன் அதிமுக நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி திமுக நகர மன்ற உறுப்பினர் கோவிந்தராஜ் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் எஸ்டி மோகன்ராஜ் வி இ கருணா ஜி தேவராஜ் அட்சயா வினோத்குமார் கோல்ட் குமரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment