அத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குமரி ஆனந்தன் அனுமதி. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 11 April 2024

அத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குமரி ஆனந்தன் அனுமதி.

குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள அத்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குமரி அனந்தன்  அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும் ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் தந்தை குமரி அனந்தன் அவர்கள் ஹைதாரபத்தில் உள்ள ராஜ்பவனில் மூன்று ஆண்டுகளாக மகளின் அரவனைபில் நரம்பு தளர்ச்சி மற்றும் சுவாச பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் தொடர்ச்சியாக தற்போது  குடியாத்தம் அத்தி மருத்துவனையில் அவருக்கு  தொடர் சிகிச்சையை அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர்  மற்றும் அத்தி மருத்துவமனையின் முதன்மை மருத்துவர்  தங்கராஜ் அவர்கள் தலைமையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு இயற்கை மருத்துவ முறையில்  சிகிச்சை அளித்ததன் மூலம் நல்ல உடல் முன்னேற்றத்துடனும் ஆரோக்கியத்துடனும்  நலமாய் உள்ளார். மேலும் சில நாட்களில் வீடு திரும்புவார் என்பதை அத்தி மருத்துவமனையின் முதன்மை இயக்க அலுவலர் திரு விஜயராகவன் அவர்கள்  தெரிவித்தார்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad