வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் திமுக சார்பில் விறுவிறுப்பான வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. 19.04.2024 அன்று நடைபெற உள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மதசார்பற்ற இந்திய கூட்டணி சார்பில் அரக்கோணம் தொகுதி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் இன்று காட்பாடி அருகே திருவலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் துரைமுருகன் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ பி நந்தகுமார், காட்பாடி பெருங்குழு தலைவர் வேல்முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.
No comments:
Post a Comment