வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் அவர்களை ஆதரித்து நேற்று இரவு குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகாமையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
வரும் பாராளுமன்றத் தேர்தலில் மோடி அவர்கள் மத்தியில் மீண்டும் பிரதமர் ஆக்க ஏசி சண்முகம் அவர்களுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து எளிமை தூய்மை வலிமையுடன் ஆட்சி அமைக்க தாமரைக்கு வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
இது தாமாக மாவட்டத் தலைவர் அருணாதயம் நகரத் தலைவர் தினகரன் புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பிரம்மா செந்தில் நகர செயலாளர் ரமேஷ் பாஜக நகர தலைவர் சாய் ஆனந்த் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கோதண்டன் உள்பட கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக வந்து இருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment