ரெட் கிராஸ் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்குதல், கோடை வெப்பத்தில்லிருந்து மீள நடைபாதையினர் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழம் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

ரெட் கிராஸ் சார்பில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்குதல், கோடை வெப்பத்தில்லிருந்து மீள நடைபாதையினர் பொதுமக்களுக்கு நீர் மோர், தர்பூசணி பழம் ரெட்கிராஸ் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.


காட்பாடி வட்ட இந்தியன் ரெட் கிராஸ் சங்கமும், வேலூர் மனிதநேய மையமும் இணைந்து கோடை வெப்பத்தில் இருந்து மீள இன்று 22.04.2024 ஆசிரியர் இல்ல வளாகத்தில் நீர் மோர் தர்பூசணி பழம் மக்களுக்கு நடைபாதை வாசிகளுக்கு வழங்கக்கூடிய நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இந்தியன் ரெட் கிராஸ் சங்கத்தின் காட்பாடி வட்டக் கிளையின் அவைத்தலைவர் முனைவர்.செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். 

வேலூர் மனிதநேய மையத்தின் பொதுச் செயலாளர் துரை கருணாநிதி முன்னிலை வகித்தார்கள் ஆசிரியர் இல்லத்தில் பொதுச் செயலாளர் செல்வமுத்து இந்தியன் ரெட் கிராஸ் காட்பாடி கிளை அவை துணைத்தலைவர்கள் குமரன் ஆர்.சீனிவாசன் ஆர்.விஜயகுமாரி மனிதநேய மையத்தின் பொருளாளர் ஜோசப் மற்றும் சார்லஸ் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர். 


தினமும் பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை நீர் மோர் மற்றும் தர்பூசணி பழங்களும் குடிநீரும் மே மாதம் வரை தொடர்ந்து வழங்குவதென தீர்மானித்துள்ளனர். வேலூரில் தொடர்ந்து 100 டிகிரிக்கும் மேலாக வெய்யில் இருப்பதாலும் மேலும் நேற்று 107 டிகிரியை தாண்டிய நிலையில் மக்கள் வெகும் சிறப்பட்டு வருகிறன்றனர். இந்த கோடை வெப்பத்திலிருந்து மக்களை காப்பற்ற நீர் மோர், தர்பூசணி பழங்கள் வழங்குவதென தீர்மானித்து இன்று துவக்கி உள்ளோம்.


- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad