தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் லயன் சங்கம் இணைந்து சர்வதேச புத்தக தின விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 23 April 2024

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் லயன் சங்கம் இணைந்து சர்வதேச புத்தக தின விழா.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் காட்பாடி ஒன்றிய கிளையின் சார்பில் இன்று 23.04.2024 காலை 11.45 மணியளவில் சர்வதேச புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. 

இந்த விழா காட்பாடி ஒன்றிய அறிவியல் இயக்கமும் அரிமா சங்கமும் இணைந்து சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயண மண்டபத்தில் நடைபெற்றது.  இந்த நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட தலைவர் என் தங்கவேல் தலைமை தாங்கினார்.  ஆப்பில் லயன்ஸ் கிளப் செயலாளர் ரவிக்குமார் கரிகிரி அரசுயர் பள்ளி தலைமையாசிரியர் கோ.பழனி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.

முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தோழி கூட்டமைப்பின் மகளிருக்கு புத்தங்களை பரிசாக அளித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, உலக புத்த நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல், அறிவுசார் ஆவணங்களை பாதுகாத்தல், போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டு தோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.1995ஆம் ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்பட்டது.  

அறிவைப் பரப்புவதற்கும், பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது எனவே நாம் அனைவரும் இது வரை புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாவிடினும் இன்று முதல் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்வோம் என கூறினார். 

தோழி கூட்டமைப்பில் இணைந்துள்ள மகளிர் குழுவினர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர். 

முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய  பொருளாளர் எம்.ஈஸ்வரி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் லயன் சங்கம் இணைந்து சர்வதேச புத்தக தின விழா.

வேலூர் மாவட்டம் ஏப்-23

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாக குழுவின் தீர்மானத்தின் அடிப்படையில் காட்பாடி ஒன்றிய கிளையின் சார்பில் இன்று 23.04.2024 காலை 11.45 மணியளவில் சர்வதேச புத்தக தின விழா கொண்டாடப்பட்டது. 

 இந்த விழா காட்பாடி ஒன்றிய அறிவியல் இயக்கமும் அரிமா சங்கமும் இணைந்து சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள நாராயண மண்டபத்தில் நடைபெற்றது.  

இந்த நிகழ்வில் அரிமா சங்க மாவட்ட தலைவர் என் தங்கவேல் தலைமை தாங்கினார்.  ஆப்பில் லயன்ஸ் கிளப் செயலாளர் ரவிக்குமார் கரிகிரி அரசுயர் பள்ளி தலைமையாசிரியர் கோ.பழனி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள்.  

முன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க ஒன்றிய செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்று பேசினார்.  

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தோழி கூட்டமைப்பின் மகளிருக்கு புத்தங்களை பரிசாக அளித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது. 

உலக புத்த நாள் என்பது வாசித்தல், பதிப்பித்தல், அறிவுசார் ஆவணங்களை பாதுகாத்தல், போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டு தோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று கொண்டாடப்படுகிறது.  1995ஆம் ஆண்டு முதன் முதலாக கொண்டாடப்பட்டது.  

அறிவைப் பரப்புவதற்கும், பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளது எனவே நாம் அனைவரும் இது வரை புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லாவிடினும் இன்று முதல் புத்தகம் படிக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக்கொள்வோம் என கூறினார். 

தோழி கூட்டமைப்பில் இணைந்துள்ள மகளிர் குழுவினர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினர். 

முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஒன்றிய  பொருளாளர் எம்.ஈஸ்வரி நன்றி கூறினார்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad