மின்சார வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 18 April 2024

மின்சார வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சென்ற 2000ம் ஆண்டில் குடியாத்தம் நகரில் கௌண்டன்ய மகாநதியின் தெற்கு பகுதியிலுள்ள நெல்லூர்பேட்டை, பாவோடும் தோப்பு, N.S.K.நகர், சந்தப்பேட்டை, காமாட்சியம்மன் பேட்டை, செருவங்கி, தாழையாத்தம் பஜார் பகுதி மக்களும் சட்டமன்ற உறுப்பினரும் பெரும் போராட்டம் நடத்தி குடியாத்தம் வாணியத்தெருவில் (வ.உ.சி.தெருவில்) இயங்கி வந்த தமிழ்நாடு மின்வாரிய. இளமின் பொறியாளர் நகரம் II பிரிவு அலுவலகம் நெல்லூர்பேட்டை (சந்தைமேடு பகுதியில்) மேட்ச் பேக்டரி தெருவில் சுமார் 24 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது.

இப்பகுதி மக்களும் மிகுந்த பயனடைந்து வருகின்றனர். தற்பொழுது இந்த அலுவலகம் மீண்டும் பெரிய வாணியத் தெருவிற்கே (வ.உ.சி.தெரு) மாற்றப்படவுள்ளதாக அறிகிறோம். இதனால் இப்பகுதி மக்கள் பெருந்துயரத்திற்குள்ளாவார்கள் என்பதால் இந்த இட மாற்றத்தை தவிர்த்து இப்பகுதியிலேயே எங்கேயாவது இடமாற்றம் செய்து கொண்டு இப்பகுதி மக்களின் இன்னல்களை குறைத்திடுமாறு குடியாத்தம் பொன்மனம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் தெரிவித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad