வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியன் பேட்டை ஆந்திர மாநில எல்லை சோதனை சாவடியில் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பறிமுதல். 2024 நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி வேலூர் மாவட்டத்தில் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை மாநில எல்லை சோதனை சாவடியில் நிலை கண்காணிப்புக்குழு அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவர் வழியாக வந்த நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன் என்பவர் காரில் சோதனை மேற்கொண்டனர்.
அதில் திருப்பதி அதில் உரிய ஆவணம் என்று திருப்பதி கோவிலுக்கு டொனேஷன் கொடுக்க எடுத்துச் சென்ற ஒரு லட்சத்து 31, 000 இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த பணத்தை கைப்பற்றி காட்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
- காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment