வேலூர் மாவட்டம் குடியாத்தம் 07/04/2024 அன்று குடியாத்தம் வன சரகம், கல்லப்பாடி பீட்டிற்கு உட்பட்ட பாக்கம் பகுதியில் காட்டு பன்றி கறி விற்பதாக வந்த ரகசிய தகவலின் படி வனசரகர் வினோபா,வனவர் மாசிலாமணி, வனக்கப்பளர்கள் பூபதி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரித்ததில் காந்தி கணவாய் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (வயது 53) என்பவர் காட்டு பன்றி கறி விற்பது தெரிய வந்தது, சுமார் 6 கிலோ கறி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவரை விசாரணை செய்து மாவட்ட வன அலுவலர் குருசாமி தபாலா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரின் உத்தரவின் படி 25000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment