வரும் 19 4 2024 அன்று நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்களை ஆதரித்து இன்று மாலை 24வது வார்டு புவனேஸ்வரி பேட்டை பகுதியில் வீதி வீதியாக வாக்குகள் சேகரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் நகர செயலாளர் ஜே கே என் பழனி, மாவட்ட துணை செயலாளர் கஸ்பா ஆர் மூர்த்தி, நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, எஸ்என் சுந்தரேசன், ஆர் கே மகாலிங்கம், கே எம் பூபதி ரவிச்சந்திரன், வி இ கருணா, அட்சயா வினோத்குமார், எஸ்டி மோகன்ராஜ் கூட்டணி கட்சிகளான தேமுதிக நகர செயலாளர் செல்வகுமார் மற்றும் பல கூட்டணி கட்சி நிர்வாகிகள் வீதி வீதியாக வாக்குகள் சேகரித்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment