வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பள்ளிகொண்டா கிலாச்சூா் பகுதியில் வசிப்பவர் ஆனந்தன் என்பவரின் மகன் சசிகுமார் (வயது 47) அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று காலை தமது மனைவி சகுந்தலா என்பவரை உடன் அழைத்துக் கொண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர் அவரை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார். பிறகு கணவன் மனைவி இருவரும் குடியாத்தம் புதிய பஸ் நிலையத்தில் தனியார் பேருந்தில் வேலூர் சென்றுள்ளார்கள் அப்போது சசிகுமார் என்பவருக்கு மயக்கம் ஏற்படவே குடியாத்தம் பாரத ஸ்டேட் வங்கி எதிரில் உள்ள சிறிய நிழல்கூடம் அருகே தனியார் பேருந்துநடத்துனர் இறக்கிவிட்டு உள்ளார் .சிறிது நேரத்தில் அவர் மனைவி கண் எதிரே உயிரிழந்தார்.
இறந்த சசிகுமாருக்கு சகுந்தலா என்ற மனைவியும் கார்த்திகா (வயது 17) ஹரி பிரசாத் (வயது 14) இரு பிள்ளைகள் உள்ளனர் தகவல் கிடைத்தவுடன் நகர போலீசார் சடலத்தை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment