இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் டீன் டாக்டர் வினிதா ரவீந்திரன் அவர்கள் செவிலியர் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். செவிலியர் கண்காணிப்பாளர் ஆலிஸ் சோனி பட்டம் பெற்ற செவிலியர் மாணவ மாணவிகளுக்கு கல்லூரியின் முத்திரை சின்னம் வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் டெபோரா ஹட்சர் டீன் மேற்கு சிட்னி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியா கலந்து கொண்டு டிப்ளமோ செவிலியர் பயிற்சி சிறந்த மாணவியாக செல்வி திவ்யா A மற்றும் பி. எஸ். சி செவிலியர் பயிற்சியில் சிறந்த மாணவியாக அன்னா கேபீரியல் அவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
செவிலியர் பயிற்சி சி.எம் .சி செவிலியர் கல்லூரி தேசத்தின் முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது. என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் .மேலும் சிஎம்சி செவிலியர் கல்லூரியானது அறிவு சார் இல்லமாக செயல்பட்டு சிறந்த செவிலியர்களை உருவாக்குகிறது. டாக்டர் ஜடா ஸ்கடர் வழியில் சேவை மனப்பான்மை அன்பு அர்ப்பணிப்பு மற்றும் அரவணைப்பு மற்றும் அரவனைப்போடு நோயாளிகளுக்கு சேவை சேவை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் .
இதில் டிப்ளமோவில் செவிலியர் பயிற்சி பெற்றவர்கள் 100 மாணவ மாணவிகள் பி.எஸ்.சி இளங்கலை செவிலியர் பயிற்சி பெற்றவர்கள் 103 மாணவ மாணவிகள் போஸ்ட் பி.எஸ்.சி இளங்கலை செவிலியர் பயிற்சி பெற்றவர்கள் 54 மாணவ மாணவிகள் போஸ்ட் டிப்ளோமாவில் செவிலியர் பயிற்சி பெற்றவர்கள் 35 மாணவ மாணவிகள் முதுகலையில் செவிலியர் பயிற்சி பெற்றவர்கள் 26 மாணவ மாணவிகள் ஆக 318 செவிலியர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர், முடிவில் டாக்டர் வினிதா ரவீந்திரன் கல்லூரி நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment