வேலூர் மாவட்டம் கீ வ குப்பம் வட்டம் கீழ் ஆலத்தூர் கிராமம் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் வேலை செய்து கொண்டு அங்கேயே தங்கி வசித்து வந்த சந்தியா (வயது 25) க/ பெ அன்பு செல்வன் என்பவர் இன்று அதிகாலை தான் வசித்து வந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சந்தியா அன்புச்செல்வன் இருவரும் மேற்படி கீழ் ஆலத்தூர் கிராம சர்வே எண் 11/A-ல் அருண்குமார் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் இருவரும் தங்கி வேலை செய்து கொண்டு வருகின்றனர்.
இவர் இந்து செங்குந்தர் வகுப்பைச் சார்ந்தவர் இவருக்கு தினேஷ் (வயது 11) என்ற மகனும் மௌலிகா (வயது 8) என்ற மகளும் உள்ளன, சந்தியாவின் சொந்த ஊர் சென்னை ஆகும், அன்பு செல்வன் என்பவரின் சொந்த ஊர் செதுக்கரை கிராமம் ஆகும், தற்கொலை செய்து கொண்ட சந்தியாவின் பிரேதத்தை காவல்துறையினர் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் தலைமை அரசு மருத்துவமனை அடுக்கம்பாறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment