அப்போது அவர் பேசியதாவது : வேலூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் எஸ்.பசுபதி எம்.டி. அவர்கள் சுமார் 15 ஆண்டு காலமாக அரசு மருத்துவராக பணி செய்து பதவியை ராஜினாமா செய்து விட்டு தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
இங்கே திமுக கூட்டணி வேட்பாளர் தற்போதைய எம்பி மீண்டும் போட்டியிடுகிறார் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் தொகுதி பக்கமே வருவதில்லை மக்களுக்கு தேவையான எந்த விதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் இப்பகுதியில் தடைபட்டுள்ள அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பார்.
தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு மிகவும் பிரபலமான மாவட்டம் வேலூர் மாவட்டம் மாவட்ட அமைச்சரிடம் அமலாக துறையினர் சோதனை மேற்கொள்ள வேண்டும். குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியில் வீடு கட்டி வசித்து வந்த சுமார் நாலாயிரம் வீடுகளை இடித்துவிட்டு அவர்களுக்கு எந்த விதமான முன்னேற்பாடுகளை செய்யவில்லை அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றால் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவார் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுப்போம், குடியாத்தத்தில் பிரதான தொழிலாளர் நெசவு தொழில் பீடி தீப்பெட்டி தொழில் உள்ளிட்டவைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பால் தொழில்கள் நலிவடைந்து போய் உள்ளது அதை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பார்.
குடியாத்தம் பகுதிகளில் இரண்டாம் நம்பர் லாட்டரி கஞ்சா விற்பனை அதிகமாக உள்ளது இவைகளை தடுக்க வேட்பாளர் பசுபதியை வெற்றி பெற செய்ய வேண்டும். குடியாத்தம் நகராட்சி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் எந்தவிதமான முன்னேற்றம் இல்லாமல் அப்படியே உள்ளது. எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தை கொண்டு வந்தார். ஜெயலலிதா அம்மா உணவகம் கொண்டு வந்தார். ஆனால் தனி நபராக அன்னதான பிரபுவாக எனது கணவர் செயல்பட்டார் வரும் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி வேட்பாளர் டாக்டர் பசுபதி அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய பொதுமக்களிடம் கேட்டார்.
இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு வேலூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் த வேலழகன் நகர கழக செயலாளர் ஜே கே என் பழனி மாவட்ட கழக துணை செயலாளர் கஸ்பா மூர்த்தி ஒன்றிய கழக செயலாளர் எஸ் எல் எஸ் வனராஜ் பேர்ணாம்பட்டு சீனிவாசன், பிரபாகரன் தேமுதிக மாவட்ட கழக செயலாளர் பிரதாப் மாவட்ட கழக துணை செயலாளர் ரமணி நகர கழக செயலாளர் செல்வகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment