வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளுாா் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 48 )இவர் குடியாத்தம் பழைய பேருந்து நிலையத்தில் வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் நேற்று பிற்பகலில் இரண்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிகொண்டா செல்லுகிறார். வேப்பூர் அருகே சென்று கொண்டிருக்கும்போது சாலையின் குறுக்கே ஆடு ஓடி வருகிறது இதனால் நிலை தடுமாறிய ஆட்டோ அருகில் இருந்த புளிய மரத்தின் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த 2 நபா்கள், லேசான காயத்துடன் னும் ஆட்டோ டிரைவருக்கு பலத்த காயத்துடன் கை எலும்பு முறிந்துள்ளது உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருவருக்கு லேசான காயத்துக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் படுகாயம் அடைந்த ஆட்டோ டிரைவர் தமிழ்ச்செல்வன் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர், இது சம்பந்தமாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment