வேலூர் மாவட்டம், காட்பாடியில் சித்தூர் பேருந்து நிறுத்தம் அருகே 27ம் தேதி நடைபெற்ற சாலை விபத்தில் காட்பாடி தாலுகாவைச் சேர்ந்த அனிதா க/பெ ஜான்ராபர்ட், அனிதா சிஎம்சி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது பத்து மாத கர்ப்பிணி ஆவர். இவர் பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டுள்ள போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு சிஎம்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கணவர் ஜான்ராபர்ட்ஹம் காயங்கள் ஏற்பட்டு சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அனிதாவின் குழந்தையை அறுவை சிகிச்சை செய்து இறந்த நிலையில் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மருத்துவரின் பரிந்துரையின் பேரில் இவர் விரைவில் குணமடைய, தமிழ்நாடு மக்கள் உரிமை கட்சி வேலூர் மாவட்ட செயலாளர், பாரத தூண்கள் செய்தி உதவி ஆசிரியரும், மக்கள் கருத்து நாளிதழ் மாவட்ட செய்தியாளரும், NJU நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாவட்ட செயலாளரும், சமூக ஆர்வலருமான பத்திரிகையாளர் டாக்டர்.ராஜ்பாபு, விபத்துக்குள்ளான சி.எம்.சி மருத்துவமனை செவிலியர் அனிதா சிகிச்சைக்கு ரத்ததானம் வழங்கப்பட்டது.
.jpg)
No comments:
Post a Comment