வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு நேற்று நள்ளிரவில் தொடங்கிய காப்பு கட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பூ கரகம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, இரவில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த புகழ் பெற்ற கங்கை அம்மன் ஆலய சிறிசு ஊர்வலம் ஆண்டுதோறும் வைகாசி 1ஆம் தேதி நடைபெறும் இந்த ஆண்டு மே 14 ஆம் தேதி திருவிழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளுவார்கள் இதனிடையே சிறுசு திருவிழா முன்னிட்டு காப்பு கட்டு ம்நிகழ்ச்சி குடியாத்தம் தென்குளக்கரையில் பகுதியில் இருந்து நள்ளிரவில் நடைபெற்ற காப்பு கட்டு ம்நிகழ்ச்சி வான வேடிக்கையுடன் தொடங்கியது.
மேலும் அலங்கரிக்கப்பட்ட பூ கரகம் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி உடன் மேளதாளத்துடன் கோபபுரம் கங்கையம்மன் ஆலயத்துக்கு எடுத்து வரப்பட்டது காப்பு கட்டு ம்நிகழ்ச்சிக்கு 100-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:
Post a Comment