அப்போது விழாவில் பேசிய தெழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் கூறியதாவது. தமிழ்நாடு அரசு 2024-25ம் நிதியாண்டிலிருந்து வருமான வரி பிடித்தம் கருவூல மென்பொருள் (IFHRMS)வழியாக மேற்கொள்ளும் போது வருமான வரி செலுத்த 20 சதவிகிதம் வரை தானாக ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்யும் படி உள்ளது.
மேலும் வீட்டு கடன், ஆயுள் காப்பீடு, இதர சேமிப்புகள் கணக்கில் கொள்ளப்படாமல் இவ்வாறு பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது. சில ஊழியர்களுக்கு அவர்களது பிடித்தம் போக மீத உள்ள தொகையை விட வருமான வரி பிடித்தம் அதிகாமாக உள்ள நிலை உள்ளது.
இத்தைகைய குறைபாடுகளை போக்கும் வகையில் சென்ற ஆண்டில் பிடித்தம் செய்த வருமான வரியினை மட்டுமே பிடித்தம் செய்து ஏப்ரல் மாதம் ஊதியத்தினை ஊழியர்கள் உரிய நேரத்தில் பெறுவதற்கு நடிவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களையும் அரசு நிதித்துறை முதன்மைச்செயலாளர் அவர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணி நிறைவு பெறும் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்கள் சேர்கை நிறுத்தப்படுகிறது. இதனால் மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறையும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. மெல்லக்கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப்பள்ளிகளிலும் இரண்டு தொழிற்கல்வி பாடங்களை அறிமுகம் செய்திட வேண்டுகின்றோம்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடராத தொழிற்கல்வி ஆசிரியர்களின் 50 விழுக்காடு பகுதிநேர பணிக்காலத்தை ஓய்வூதியம் நிர்ணயிப்பதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்ற தேர்தல் வாக்குறுதிக்கு உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு தமிழக அரசு ஆணைகள் வழங்கிட கோருகின்றோம். நிலுவையில் உள்ள 171 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்கிட கோருகின்றோம்.
தேர்தல் அறிக்கை பக்கம்-84 பத்தி-311ல் தெரிவித்துள்ளபடியும் முதுகலை ஆசிரியருக்கு இணையான ஊதியம் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் உடனே வழங்கிட தமிழக அரசை கோருகின்றோம், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1000 தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விழாவிற்கு ஒருங்கிணைப்பாளர் என்.இரவி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் சி.குணசேகரன் சிறப்புரையாற்றினார்.
முன்னதாக ஜி.கொளஞ்சிநாதன் வரவேற்று பேசினார். பண்ருட்டி எஸ்.மோகன்குமார், பரங்கிப்பேட்டை ஜி.உதயகுமார் ஒருங்கிணைப்பாளர்கள் ஜி.பாண்டியன், எஸ்.சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், மாநிலப்பொருளாளர் வி.சேரமான் முன்னாள் மாநில நிர்வாகிகள் ஜெ.பாலச்சந்தர், த.பாலு, த.இராமச்சந்திரன், எஸ்.ரெங்கநாதன் டி.சிவக்குமார், எஸ்.ராதாகிருஷ்ணன், வி.பிரபாகரன், ஆர்.ரவிசங்கர் பி.அழகேசன் ஜி.மேரிராஜ் ஆகியோர் ஓய்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டி பேசினர்.
பட்டிமன்ற பேச்சாளர் முதுகலை தமிழாசிரியர் ஆர்.நவஜோதி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கான யோசனைகளை நகைச்சுவையுடன் கூறினார். பணி நிறைவுப் பாராட்டு தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், சிதம்பரம் வி.முத்துகுமரன், ஆர்.இராஜசேகரன், உ.விஜயா, ஜி.சந்திரா, கடலூர் எம்.மோகன்குமார், சேத்தியாத்தோப்பு கே.இராஜேந்திரன், நெய்வேலி பி.எஸ்.ஜெயந்தி, திட்டக்குடி ப.தயாநிதி, புவனகிரி ஜி.தமிழரன் ஆகியோருக்கு நினைவுக்கேடயம், சால்வை அணிவித்து பாராட்டப்பட்டனர். முடிவில் ஓய்வு பெற்ற தொழிற்கல்வி ஆசிரியர் ஜி.நடராஜன் நன்றி கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.

No comments:
Post a Comment