குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி காப்பு காட்டில் நேற்று இரவு வன விலங்குகளைவேட்டையாட மர்ம நபர்கள் காட்டுக்குள் சென்று இருப்பதாகவனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வனசரகர் வினோபா தலைமையில் வனத்துறையினர் காட்டுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மா்மநபா் நெற்றி பேட்டரி கையில் நாட்டு துப்பாக்கியுடன் காட்டில் சுற்றித் திரிந்த வரை வனத்துறையினா், மடக்கி பிடித்து விசாரணை செய்தார்கள்.
விசாரணையில் அவர் குடியாத்தம் அடுத்த காந்தி கணவாய் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சுப்பிரமணி (வயது 56) என்பதும் அவர் வன விலங்குகளை வேட்டையாடும் முயன்றவர் என்று தெரிய வந்தது இதை எடுத்து சுப்பிரமணி என்பவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி நெற்றி பேட்டரி மருந்து பால்ஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment