வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ.மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று 04.04.2024-ம் தேதி வருகின்ற பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அண்டை மாநிலமான ஆந்திரா - தமிழக போலீசார் இணைந்து தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதமும் நடைப்பெறாமல் இருக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
ஆந்திர மாநில எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்துதல், பணம் பரிமாற்றம் மற்றும் பரிசு பொருட்கள், மதுப்பாட்டில்கள், கஞ்சா மற்றும் குட்கா போன்ற போதைப் பொருட்கள் கடத்துவதை தடுப்பது பற்றியும் மேலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆந்திரா மாநில காவல் அதிகாரிகள் மற்றும் வேலூர் மாவட்ட காவல் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
- வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment