ஏப்ரல் 10ம் தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி வருகை வேலூர் வருகை தரும் பிரதமர் மோடிக்கு புதிய நீதி கட்சியின் சார்பாக பிரமாண்ட வரவேற்பு அளிக்க உள்ளனர்.
வேலூர் பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர்,பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி, கோயம்புத்தூர், ஆகிய இடங்களில் பிரதமர் மோடி தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இந்தநிலையில் வரும் 10ம் தேதியன்று வேலூர் கோட்டையில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார் இந்நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்.
- வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment