குடியாத்தத்தில் கு.மு அண்ணல் தங்கோ பிறந்தநாள் விழா; விஐடி வேந்தர், பழ. நெடுமாறன் பங்கேற்பு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 25 April 2024

குடியாத்தத்தில் கு.மு அண்ணல் தங்கோ பிறந்தநாள் விழா; விஐடி வேந்தர், பழ. நெடுமாறன் பங்கேற்பு.


தமிழ் இயக்கம் மற்றும் தனித் தமிழ் காவலர் அண்ணல் தங்கோ சார்பில் குடியாத்தம் அடுத்த அம்மனாங்குப்பம் கிராமம் அருகே அமைந்துள்ளஉள்ள கே. எம் .ஜி .கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நேற்று மாலை  கு.மு. அண்ணல்  தங்கோ 121 வது பிறந்தநாள் நடைபெற்றது.


இதற்கு முன்னதாக குடியாத்தம் நேரு பூங்கா வளாகத்தில் உள்ள கு.மு. அண்ணன் தங்கோ முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  செலுத்தினார்கள், இதற்கு கே .எம் .ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே எம் ஜி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் கே எம் பூபதி வரவேற்றார். குடியாத்தம் நகராட்சித் தலைவர், திமுக நகர செயலாளர் எஸ். சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார். உலக தமிழர் பேரவை நிறுவனர் பழ.நெடுமாறன் சிறப்புரை ஆற்றினார்.

விஐடி பல்கலைக்கழக வேந்தர், தமிழியக்க நிறுவனத்தலைவர், தமிழக முன்னாள் அமைச்சர் ஜி. விஸ்வநாதன் பங்கேற்று அண்ணல் தங்கோ குடும்பத்தினர் மற்றும் வாரிசுகள், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருக்கு சால்வை அனுபவித்து கௌரவித்து அண்ணன் தங்கோ  வாழ்க்கை வரலாற்று, விடுதலைப் போராட்டம், தமிழ் பற்று, ஆகியவை குறித்து பேசினார். தமிழ் இயக்க பொதுச்செயலாளர் பேராசிரியர் அப்துல் காதர், குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.


குடியேற்றம் கம்பன் கழக நிறுவனர் ஜே .கே. என். பழனி ,தொழில் அதிபர் அருணோதயம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், குடியேற்றம் முத்தமிழ் சுவை சுற்றம் அறக்கட்டளை நிறுவனர்  புலவர் பதுமனார், பட்டிமன்ற நடுவர் கவிஞர் வேலூர் த.அன்பு, தமிழ் ஆசிரியர் முனைவர் தமிழ் திருமால், கல்லூரி விரிவுரையாளர் கவிஞர்  சம்பத்  ஆகியோர் நிகழ்ச்சி தொகுப்புரை ஆற்றினார்கள். இதில் இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் தலித் குமார், ஆசிரியர் தமிழ்ச்செல்வன், ஆடிட்டர் கிருபானந்தம், வி.சி.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad