பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச சதுரங்க பயிற்சி முகாம் தொடக்க விழா. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 27 April 2024

பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச சதுரங்க பயிற்சி முகாம் தொடக்க விழா.


வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கான கோடைகால இலவச சதுரங்க பயிற்சி முகாம் தொடக்க விழா நேற்று மாலை குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டையில் உள்ள பெரியார் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட அமைப்பாளர் வே விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட துணை செயலாளர் பி தனபால் ஒருங்கிணைப்பாளர்  சையத் அலிம் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினார்கள் உ விஸ்வநாதன் பழ ஜெகன் பாபு மா அழகிரி தாசன்  பெ சுப்பிரமணி சி சாந்தகுமாா் வி மோகன் ஓவியர் சிவா ஈ தமிழ் தரணி கே எஸ் அஷ்ரப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில அமைப்பாளர் பகுத்தறிவு கழகம்  இர அன்பரசு மாவட்டத் தலைவர் வி  இ சிவகுமார் மாவட்ட காப்பாளர்  வி சடகோபன் ஆகியோர் தொகுப்புரையாற்றினார்கள், சிறப்பு விருந்தினர்கள் கே எம் ஜி கல்வி நிறுவனங்கள் கே எம் ஜி ராஜேந்திரன் வழக்கறிஞர் கே எம் பூபதி துணை பொது செயலாளர் பகுத்தறிவு கழகம் அண்ணா சரவணன் பயிற்சியாளர் பி கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


பயிற்சி முகாம் 26 4 2024 முதல் 26 5 2024 வரை தினமும் மாலை  4-30-மணி முதல்  6-30 மணி வரை நடைபெறும். 8-வயது முதல் 14- வயது வரை உள்ள மாணவர்கள் முகாமில் சேர்த்துக் கொள்ளப்படும், நன்றி உரை ப ஜீவானந்தம் பகுத்தறிவு கழகம் சார்பில் தெரிவித்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

No comments:

Post a Comment

Post Top Ad