வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 April 2024

வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்.


வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தலுக்காக சின்னம் பொருந்தும் பணி இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி குடியாத்தம் வட்டாட்சியர் ராதா தேவி முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு அரசியல் கட்சி சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.

தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் வடிவேலு பலராமன் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஜே கே என் பழனி நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி ஜி தேவராஜ் வி இ கருணா மெடிக்கல் சரவணன் வழக்கறிஞர் வினோத் குமார் கோல்டு குமரன் வழக்கறிஞர்கள் கோவிந்தசாமி இளங்கோ புதிய நீதி கட்சி நகர செயலாளர் ரமேஷ் மற்றும் துரை வெங்கடேசன் எஸ் எஸ் பி பாபு ஆகிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad