வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 18 April 2024

வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்.


நாளை நடைபெற உள்ள வேலூர் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமாக குடியாத்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 29 மண்டலங்களில் உள்ள 293 வாக்கு மையங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் விவி பேட் மற்றும் தேர்தலுக்கு உண்டான பொருள்களை அனுப்பும் பணி இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சுபலட்சுமி தலைமையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வாகனத்தில் அனுப்பும் பணி நடைபெற்றது.

உடன் குடியாத்தம் வட்டாட்சிய சித்ராதேவி பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் விநாயகமூர்த்தி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் நரசிம்மன் கலைவாணி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர்கள் வடிவேல் பலராமன் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஜே கே என் பழனி நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் ரமேஷ் துரைசெல்வம் ஆகியோர் உடன் இருந்தனர், திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மண்டல பொறுப்பாளர்களுக்கு பணி ஆணைகளும் வழங்கப்பட்டன.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad