வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பு பகுதியில் உள்ள அத்தி ஆயுஷ் மருத்துவமனையில் சிறப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது. இந்த முகாமில் கை கால் வலி மூட்டு வலி முடக்குவாதம் வெரிகோஸ் போன்ற நோய்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறப்பான முறையில் மருத்துவம் செய்யப்படுகிறது.
ஆயுர்வேதா ஹோமியோபதி யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும், இந்நிகழ்ச்சியில் அத்தி கல்வி குழும் தலைவரும் சிறுநீரக நிபுணர் டாக்டர் சௌந்தர்ராஜன் தலைமை தாங்கினார். தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் விஜய் ஆயுர்வேதா மருத்துவர் கீர்த்தனா ஹோமியோபதி மருத்துவர்கள் டாக்டர் பாலாஜி டாக்டர் மினிட்டா ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் பரிசோதனை செய்து செய்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment