வேலூர் மாவட்டம் மே 20
வேலூர் அறிவியல் இயக்க வேலூர் ஒன்றிய மாநகர கிளை நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணிவரை, மாவட்ட அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைவர் பேரா.முனைவர் கே.தேவி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலர் செ.நா.ஜனார்தனன் அவர்கள் பங்கேற்று, மாநில செயற்குழு கூட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார். மேலும் வேலூர் குழந்தைகள் அறிவியல் விழா நடத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மாவட்ட நிர்வாக்க்குழு உறுப்பினர் பா.ராஜேந்திரன், முன்னிலை வகித்தார். கிளை செயலாளர் முத்து சிலுப்பன் ஆண்டு செயல்பாடுகள் குறித்தும் குழந்தைகள் அறிவியல் விழா நடத்த திட்டமிடுவது குறித்தும் பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1) 2024 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை 30-06-2024க்குள் பள்ளி/ கல்லூரி ஆசிரியர், மாணவர்கள் உட்பட 100பேர் சேர்ப்பது. கிளை நிர்வாகிகள் உட்பட 20 ஆயுள் சந்தாக்கள் ( தலா ரூ.300) ஆண்டு சந்தா 80 பேர் ( ரூ.30)
2) வருகின்ற ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் வெங்கடேஸ்வரா அல்லது ஊரிசு பள்ளியில் குழந்தைகள் அறிவியல் விழா-2024 நடத்துவது. மாணவர்கள் 100 பேர், கருத்தாளர் & பொறுப்பாளர்கள் 30 பேர் பங்கேற்க வைப்பது. குழந்தைகள் அறிவியல் விழாவை சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
3) சூழல் பாதுகாப்பு , சைபர் கிரைம், போதை ஒழிப்பு விழிப்புணர்வு உட்பட செயல்பாடுகள் உள்ளடக்கிய பயிற்சிகள் அளிப்பது. மாநில/ மாவட்ட அளவிலான சிறந்த கருத்தாளர்களை பயன்படுத்துவது/ கிளை அளவில் ஆர்வமுள்ள உறுப்பினர்கள்/ கல்லூரி மாணவர்கள்/ ஆசிரியர்கள்/ கருத்தாளர்களாக உருவாக்குவது.
4) வேலூர் மாவட்டத்தில் 10 மற்றும் +2 வகுப்பு தேர்ச்சி விகிதம் மாநில அளவில் கடைசி இடத்தில் இருப்பது குறித்து மிகுந்த கவலையுடன் விவாதிக்கப்பட்டது. அதற்கான காரணங்களை ,ஒரு சமூக ஆய்வு ( Social Survey) வாயிலாக கண்டறிந்து, மாவட்ட கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன், அனைத்து உயர்நிலை/ மாநில பள்ளி அளவில் அறிவியல் இயக்கத்தின் சார்பில் ஒரு விழிப்புணர்வு இயக்க கூட்டங்களை நடத்துவது. ஆசிரியர், பெற்றோர் & மாணவர்கள் அளவிலான கலந்துரையாடல் அரங்குகளை நடத்துவது , தேர்வுக்கு முன்னதாக மாணவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தன்னூக்க கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
5) ஜூன் இரண்டாவது வாரத்தில் விரிவான கிளைக் கூட்டத்தை நடத்தி,2024 ஆண்டுக்கான கிளை செயல்பாடுகளை & நிதி ஆதாரங்களை திட்டமிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முடிவில் கிளை பொருளாளர் பா.சேகர் நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment