குடியாத்தம், மே 20
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ரயில் நிலையத்தில் ரயிலில் கடத்தி வந்த 23
கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் ரயில் நிலையம் அருகே நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீஸார் திங்கள்கிழமை வாகன சோதனையில்
ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு, பின்னாக பதில் அளித்தனர்.
அவர்கள் வைத்திருந்த 3 பைகளை சோதனை செய்ததில் அதில் 23 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்களில் ஒருவர்
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முகமது காலித்(வயது 32)மற்றொருவர் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அபிஷேக்(வயது 21) என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் ஒரிசாவில் கஞ்சா வாங்கிக்கொண்டு அதை ரயில் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு கொண்டு செல்ல இருந்தது தெரிந்தது.
குடியாத்தம் ரயில் நிலையத்தில் அந்த ரயிலில் ரயில்வே போலீஸார் சோதனை மேற்கொண்டதால், இருவரும் ரயிலில் இருந்து இறங்கி கீழே வந்துள்ளனர். அப்போது நகர போலீஸாரிடம் அவர்கள் சிக்கியுள்ளனர்.
இருவரையும் கைது செய்த குடியாத்தம் நகர போலீஸார் அவர்களிடம் தீவிர
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment