குடியாத்தம் மே 20
குடியாத்தம் அடுத்த காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி (வயது 38) இவர் தனது நண்பரான பரசுராம்பட்டியை சேர்ந்த ஆறுமுகத்தை அழைத்துக் கொண்டு சொந்த வேலை காரணமாக குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா நோக்கி சென்று கொண்டிருந்தார்.
விநாயகபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, குடியாத்தம் நோக்கி எதிரே வந்த கார் டூவீலர் மீதும் மோதி நிரறுத்தாமல் சென்றது.
இதில் டூவீலரில் வந்த ரவி அவரது நண்பர் ஆறுமுகம் ஆகியோர் நிலைகுலைந்து சாலையில் விழுந்தனர். பெரும்காயம் அடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரவியின் மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்று காருக்குறித்து விசாரி நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment