வேலூர், மே 20-
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் நகைகளை திருடிய ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடர் நகை திருட்டு நடந்து வந்தது. இந்நிலையில் வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதில் ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த பாரதி(வயது 26) என்ற இளம்பெண் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளிடம் நகைகளை திருடுவது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் இளம்பெண் பாரதியை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் இருந்து 33 சவரன் நகைகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் பாரதியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment