காட்பாடி மே27
வேலூர் மாவட்டம்
காட்பாடி அடுத்த கசம் பகுதியில் 3 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்த காவல் துறை
வேலூர்மாவட்டம்
காட்பாடி பகுதியில் தொடர்ச்சியாக ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா கடத்தி வருவதை முழுமையாக ஒழிக்க வேலூர் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் மணிவண்ணன் தீவிரம் காட்டி வந்த நிலையில், காட்பாடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், காட்பாடி வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில், காவல் பிரகாஷ் திருவலம் உதவி ஆய்வாளர் மற்றும் கஞ்சா காவல்துறையினர் ஒழிப்பை தீவிரப் படுத்தி வந்த நிலையில
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக வந்த ரகசிய தகவல் அடிப்படையில், காட்பாடி கசம் முனீஸ்வரன் கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி சோதனை செய்த போது அவரிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்து திருவலம் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கசம் பகுதியில் பழமை வாய்ந்த வீட்டில் மேல் பகுதியில் 1.5 கிலோ கஞ்சா இருந்ததை ஒப்புக்கொண்டா ர். காவல் துறையினர் அதையும் பறிமுதல் செய்து சுமார் மூன்று கிலோகஞ்சாகடத்தி வந்த சேவூர் கரிகிரி வழி ரவுண்டு டேபிள் பகுதி சேர்ந்த துரைராஜ் மகன் சிவா (எ) அந்தோணி(வயது 27 )என்பதும் ஏற்கனவே அவர் மீது காவல் நிலையம் பல வழக்குகள்நிலுவையில் உள்ளநிலையில் அவர் மீது காவல் உதவி ஆய்வாளர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து நீதிபதி முன் நிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment