போக்சோ சட்டத்தில் கூலி தொழிலாளி கைது - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 27 May 2024

போக்சோ சட்டத்தில் கூலி தொழிலாளி கைது

குடியாத்தம் மே 27

வேலூர் மாவட்டம் கே வி குப்பம் வட்டம் பெரியார் நகரில் வசிக்கும் சாமிநாதன்
த /பெ ரங்கநாதன் (வயது 45)
இவர் தற்காலிகமாக டேங்க் ஆபரேட்டராக வேலை செய்து வருகிற
அதே பகுதியில் வசிக்கும் இவருடைய உறவினர் வீட்டுக்கு சாமிநாதன் அடிக்கடி சென்று வருவார்
இவரது உறவினர் சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி  சாமிநாதன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். 

இந்நிலையில் 24 5 2024 அன்று சிறுமிக்கு வயிற்று வலி வந்ததால், அவரது பெற்றோர்  மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர்.  மருத்துவ பரிசோதனையில்
அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.  
சிறுமி கொடுக்க புகாரின் அடிப்படையில் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து சாமிநாதன் என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad