வேலூர் 34 வது வார்டில் காணாறு கால்வாய்களை தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட மேயர். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 18 May 2024

வேலூர் 34 வது வார்டில் காணாறு கால்வாய்களை தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட மேயர்.

வேலூர், மே 18
 வேலூர் மாநகராட்சி 34 வது வார்டில் உள்ள வசந்தபுரம் பகுதியில்  கழிவுநீர் காணாறு உள்ளது.கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் மற்றும் தேவையற்ற குப்பைகளால் கால்வாய் துர்நாற்றம் வீசுவதும் மட்டுமல்லாமல்  நோய் தொற்றுக்கு அவதிப்பட்ட வந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையாக!

 கோரிக்கையை ஏற்று ஜேசிபி இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணிகள்  நடைபெற்று வந்தது .தூர் வாரும் பணிகள் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாகச் சென்று வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 அத்துடன் அப்பகுதி மக்களிடம் குப்பைகளை கால்வாயிலும், பொது இடங்களிலும் கொட்ட வேண்டாம், தங்கள் வீதிகளில் வரும் தூய்மை பணியாளர்களிடம் மட்டுமே தர வேண்டும் .
என அவர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்தார். 

இந்த ஆய்வின்போது மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். இந்த குப்பைகளை கால்வாயில் கொட்டுவதால் கால்வாய் அடைப்பு ஏற்படுவதுடன் தண்ணீர் செல்வது தடைபடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசி தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுகிறது என்றும் அப்போது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா அறிவுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்

No comments:

Post a Comment

Post Top Ad