குடியாத்தம் மே 18
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் ஸ்டெச்சர் மற்றும் வீல் சேர்கள் உடைந்த நிலையில் இருப்பதால் அவசர நேரத்தில் பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை வீல் சேர் சக்கரங்கள் உடைந்த நிலையில் இருப்பதால் நோயாளிகளை தூக்கிச் செல்லும் அவலம் ஏற்படுகிறது.
மேலும் நோயாளிகள் பயன்படுத்தும் ஸ்டெச்சர் மற்றும் வீல் சேர்களை நோயாளிகளை வைத்துக்கொண்டு பொதுமக்களே தள்ளிச் செல்வதால் வீல் சேர்கள் உடைந்து விடுகிறது மேலும் அரசு மருத்துவமனை ஓய்வு பெற்ற மருந்தாளர் ஒருவர் நன்கொடையாக சுமார் 30 ரூ ஆயிரம் மதிப்புள்ள வீல் சேரை மருத்துவமனைக்கு வழங்கினார். அதுவும் உடைக்கப்பட்டுள்ளது
இதற்கு மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை அமர வைத்து வீழ்சேரரை தள்ளிச் சென்றால் பழுதாக வாய்ப்பில்லை மருத்துவத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment