வேலூர் மாவட்டம் மே 18
வேலூர் பேரிப்பேட்டை அருள்மிகு காளிகாம்பாள் சமேத கமடேஸ்வரர் ஆலயத்தில் வீர பிரம்மேந்திர சுவாமிகளுக்கு ஆராதனை விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம் தொழிற்சங்க பேரவை காளிகாம்பாள் ஆலய திருப்பணி அபிவிருத்தி டிரஸ்ட் தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் அன்னாபிஷேக விழா குழு அமாவாசை கமிட்டியினர் வேலூர் மாநகர மாவட்ட விஸ்வகர்ம குழுவினர் இளைஞர் அணி இணைந்து நடத்தினர்
ஆலயத்தின் தலைமை குருக்கள் ஜோதி முருகாச்சாரி அவர்கள் தலைமையில் தியாகராஜன் குருக்கள் கொண்ட குழுவினர் அபிஷேக ஆராதனைகள் செய்தனர் .
வீர பிரம்மேந்திர ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறும் குறித்து திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவேந்தர் குப்பன் ஆச்சாரி உரையாற்றினார்
விழாவிற்கான ஏற்பாடுகளை வெள்ளி வி வெங்கடேசன் கே.ஜி.சண்முகம் ஆச்சாரி தமிழ்நாடு விஸ்வகர்மா நண்பர்கள் நல சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அரசு வழக்கறிஞர் வை.நடன சிகாமணி மாநில துணைச் செயலாளர் எம் பிச்சாண்டி மாவட்டத் தலைவர் வி.விஸ்வநாதன் எல் பன்னீர்செல்வம் எஸ் அச்சுதன் கே.ஜகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விழா காலை 8:30 மணிக்கு துவங்கி பகல் 12 மணி வரை நடைபெற்றது. விழா நிறைவில் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது இன்று 19.05.2024ல் விஸ்வகர்ம சமுதாயத்திற்கு பாத்தியபட்ட அருள்மிகு காளிகாம்பாள் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நிறைவு பெற்று 7ஆண்டுகள் முடிந்துள்ளது எனவே 19.05.2024 காலை 9.00 மணிமுதல் 12 மணிவரை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment