குடியாத்தம் மே 17
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் 5 ஆம் ஆண்டு துவக்க மற்றும் மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளாடை வழங்கும் விழா கொண்டாடப்பட்டது.
அத்தி கல்வி குழுமத்தின் தலைவர் சிறுநீரக வியல் நிபுணர் டாக்டர் p.சௌந்தரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மேதகு ஆளுநர் டாக்டர் கு.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் கலந்துக் கொண்டு குத்து விளக்கு ஏற்றி இயற்கை மற்றும் யோகா மருத்துவத்தின் மூலம் நோய்கள் குணப்படுத்தப்பட்டு வருகிறது இயற்கை மருத்துவத்தையும் யோகா பயிற்சியையும் செய்து வந்தால் ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும் வாழ வழி வகுக்கும் மற்றும் மருத்துவர்களின் சேவை பணிகளையும் எடுத்துக் கூறினார். மேலும் டாக்டர் பழனி ரவிச்சந்திரன் , டாக்டர் s. விஜய் , விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அத்தி இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் தங்கராஜ் அனைவரையும் வரவேற்றார். அத்தி செவிலியர் கல்லூரி முதல்வர் டாக்டர் பால்ராஜ் சீனிதுரை,குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k. குமரவேல் , நிர்வாக அதிகாரி செந்தில் மனிதவள மேம்பாட்டு அலுவலர்கள் காமாட்சி,ஜெகதீசன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment