குடியாத்தம் மே.17
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் (கிழக்கு )உள் வட்டம் கொண்ட சமுத்திரம் கிராமம் புல எண் 137 அரசு புறம்போக்கு ஏரி பகுதியில் ராஜி பட்டி கிராமத்தைச் சேர்ந்த எழில் வேலன் (வயது 50) S/0 தண்டபாணி என்பவர் மேற்படி ஏரியில் அமைக்கப்பட்டுள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட உபரிநீர் தேங்கியுள்ள இடத்தில் விழுந்து இறந்து கிடந்துள்ளார்.
இன்று (17.5.2024) பிற்பகல் 4:00 மணிக்கு தெரியவந்தது. இறந்த நபருக்கு மைதிலி (வயது 45) என்கிற மனைவியும் கோமதி இந்து ஆகிய இரண்டு திருமணம் ஆகாத மகள்களும் உள்ளனர். என விசாரணையில் தெரிய வருகிறது.
தற்போது குடியாத்தம் நகர காவல்துறையினர் பிரேதத்தினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment