குடியாத்தம் மே.17
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர் பேட்டை பகுதியை சேர்ந்த கீதா க/பெ சீனிவாசன் (வயது 54) இவர் குடி பழக்கம் உள்ளவர்.
நேற்றைய தினம் அரசு வழங்கிய மகளிர் காண உதவித்தொகை ரூபாய் 1000 பெற்றுக் கொண்டு
பாக்கம் அருகில் உள்ள மதுபான கடையில் (டாஸ்மார்க் ) சென்று மதுபானம் வாங்கிக் உள்ளார்.
அருகில் இருந்த விவசாய நிலத்தில் தனிமையில் அமர்ந்து மது அருந்தி உள்ளார்.
அளவுக்கு அதிகமான மது போதை ஆனதால் அன்று இரவு அவர் வீட்டுக்கு செல்லவில்லை. இரவு நீண்ட நேரம் ஆகியும் தாய் வீட்டுக்கு வரவில்லை என்ற பதட்டத்தில் அவருடைய மகன்கள் பல இடங்களில் தேடி உள்ளார்கள்.
மறுநாள் காலை மது அருந்திய நிலத்தில் உயிர் இழந்து உள்ளார் என்பது தெரியவந்தது.
இது சம்பந்தமாக நகர காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தசாரதி சம்பவம் இடத்திற்கு சென்று இறந்து போன மூதாடியை உடலை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment