குடியாத்தம் கங்கை அம்மன் சிறசு திருவிழாவில் புதிய நீதி கட்சி சார்பாக 5000 நபர்களுக்கு அன்னதானம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 May 2024

குடியாத்தம் கங்கை அம்மன் சிறசு திருவிழாவில் புதிய நீதி கட்சி சார்பாக 5000 நபர்களுக்கு அன்னதானம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம்  அருள்மிகு கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு பழைய பஸ் நிலையம் அருகில் புதிய நீதி கட்சி தலைவர் Dr A C S  அவர்களின் நல்வாழ்த்துகளுடன் உணவு வழங்கும் விழா இன்று காலை 12 மணி அளவில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு மண்டல செயலாளர் பி சரவணன் தலைமை தாங்கினார்
நகர செயலாளர் எஸ் ரமேஷ் வரவேற்றார். மாநில தொண்டரணி செயலாளர் பட்டு பாபு தகவல்  நுட்ப்பு பிரிவு பிரவீன் குமார் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் செந்தில் கலந்துகொண்டு 5000 நபர்களுக்கு தயிர் சாதம் சாம்பார் சாதம் குடிநீர் பாட்டில் வழங்கினார்கள்.


நகர நிர்வாகிகள் வினோத் குமார் சரத்குமார் அன்பு ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். நகர மகளிர் அணி செயலாளர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார். புதிய நீதி கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டடு இருந்தது‌.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad