பகுதி நேர நியாய விலை கடை கேட்டு பொதுமக்கள் மனு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 14 May 2024

பகுதி நேர நியாய விலை கடை கேட்டு பொதுமக்கள் மனு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கதிர்குளம் கிராமத்தில் சுமார்
380  குடும்பத்திற்கு மேலாக வசித்து வருகின்றார்கள். இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரேஷன் பொருள்களை வாங்க வேண்டும் என்றால் சுமார்   3  கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அனுப்பு கிராமத்திற்கு சென்று ரேஷன் பொருள்களை வாங்க வேண்டிய நிலையில் உள்ளது.


எங்கள் பகுதியில்  உள்ள சுமார் 168 குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளனர் எனவே கதிர் குளம் கிராமத்தில் பகுதி நேர ரேஷன் கடை அமைத்து தர அப்பகுதி பொதுமக்கள் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று மனு கொடுத்தனர்.


- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad