வேலூர் மாவட்டம் அடுத்த சத்துவாச்சாரி மந்தவெளி தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எதிரே தூய்மைப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பெண் ஒருவர் மீது இருசக்கர வாகனம் மோதிய தில் தூய்மை பணியாளர் விஜயலட்சுமி (வயது 52) கால் முறிவு ஏற்பட்டது.
இதனிடையே அங்கிருந்து பொதுமக்கள் வாகன விபத்தில் படுகாயம் அடைந்த விஜயலட்சுமி மீட்டு வேலூர் அரசு அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு 108 வாகன மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. உடனடியாக தகவல் அறிந்த அதிமுக மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு உடனடியாக சென்று தூய்மை பணியாளர்களுக்கு ஆறுதலுக்கு கூறி நிதி வழங்கினார்.
வேலூர் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் எஸ் ஆர் கே அப்பு மற்றும் சத்துவாச்சேரி பகுதி செயலாளர் APL.சுந்திரம் இணை செயலாளர் AA.தாஸ் வட்டக் கழக செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வந்த தூய்மை பணியாளர் விஜயலட்சுமிக்கு ஆறுதல் கூறி பழங்கள் மற்றும் நிதி உதவி வழங்கினார்.
-வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment