வேலூர் மாவட்டம்
வேலூர் தாலுகா போலீசார் வல்லம் டோல்கேட் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மடக்கி சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் கணியம்பாடி அடுத்த பாலாத்துவண்ணான் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 22) என்பதும் கணியம்பாடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின்பேரில் 6 மோட்டார்சைக்கிள்களையம் போலீசார் பறிமுதல் செய்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment