விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்புகள் குறித்து செயல்முறை விளக்கம் மற்றும் விவசாயிகள் கூட்டம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 12 May 2024

விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்புகள் குறித்து செயல்முறை விளக்கம் மற்றும் விவசாயிகள் கூட்டம்.

குடியாத்தம், மே12
கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லுாரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள் மஞ்சுளா, மோனிகா, நந்தனா, ஏ.நிவேதா, எஸ்.ஆர்.நிவேதா, வி.நிவேதா ஆகியோர் கிராமப்புற தோட்டக்கலை அனுபவ பயிற்சியின் கீழ் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கம் மற்றும் விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

இதையொட்டி  தோட்டக்கலை கல்லுாரி மாணவிகள் சார்பில் கால்நடை மருத்துவமுகாம் நடந்தது.
இதில் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டன. 
மேலும் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டன.
இதில் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் ரம்யா தேவி உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர்.


# குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad