வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியில் உள்ள அரிசி கடை எதிரில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த சின்ன குழந்தை (வயது 75 )என்ற மூதாட்டி தலையில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளியை போலீசார் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் குற்றவாளி குடியாத்தம் பகுதியில் சுற்றி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, இதை அடுத்து நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் போலீசார் அங்கு சென்று குற்றவாளியை கைது செய்தனர். அவர் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பாரதியார் தெருவை சேர்ந்த துரைசாமி என்பவரின் மகன் தரணி என்பதும் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment