வேலுாா் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.திருவிழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு இடங்களில் அன்னதானமும் நீர்மோர் பந்தல் தண்ணீர் பந்தல் அமைத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ கங்கை அம்மனுக்கு காணிக்கையாக பணம் நகைகள் மற்றும் புடவைகள் சாத்தப்பட்டது.
பக்தர்கள் அம்மனுக்கு சாத்திய புடவைகள் இன்று கோயில் வளாகத்தில் ஏலம் விடப்பட்டது. இதில் அறநிலை துறை செயல் அலுவலர் சிவகுமார், ஆய்வாளர் சு.பாரி, ஊர் நாட்டாமை ஆர் ஜி எஸ் சம்பத் ஊர் தர்மகர்த்தா பிச்சாண்டி திருப்பணி குழு தலைவர் ஆர் ஜி எஸ் கார்த்திகேயன் இவர்கள் முன்னிலையில் கோவில் வளாகத்தில் அம்மனுக்கு சாத்திய புடவைகள் இன்று ஏலம் விடப்பட்டது. இதில் 200- மேற்பட்ட பக்தர்களும் பெண்களும் கலந்து கொண்டு புடவைகளை ஏலத்தில் எடுத்தனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment