வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிரசித்தி பெற்ற அருள்மிகு கெங்கையம்மன் வைகாசி திருவிழா மே 14 ம் தேதி நடைபெற்றது, இன்று 16 ம் தேதி புஷ்பப் பல்லுக்கு நடைபெற உள்ளது.
பிற்பகல் ஒரு மணி அளவில் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி சண்முகம் அவர்கள் சாமி தரிசனம் செய்ய அம்மனுக்கு பட்டுப் புடவை பூமாலை மஞ்சள் பழங்கள் வெற்றிலை பாக்கு இனிப்புகள் சீர்வரிசைகள் மற்றும் பூஜை பொருள்களுடன் மேல தாளத்துடன் ஆலயத்திற்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை மண்டல செயலாளர் பி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்டி சண்முகம், மு சட்டமன்ற உறுப்பினர் இளவழகன் புதிய நீதி கட்சி மாவட்ட செயலாளர் பிரம்மாஸ் ஆர் பி செந்தில் தொண்டரணி மாநில செயலாளர் பட்டு பாபு நகர செயலாளர் எஸ் ரமேஷ் ஒன்றிய செயலாளர் ராம இளங்கோவன் ஐ டி விங் மண்டல செயலாளர் டி பிரிவின் குமார் கூட்டணி கட்சி தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அருணாதையம் மற்றும் ஊர் நாட்டாமை ஆர் ஜே சம்பத் திருப்பணி குழு தலைவர் ஆர் ஜி எஸ் கார்த்திகேயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.
No comments:
Post a Comment