குடியாத்தம் பகுதியில் புஷ்ப பல்லக்கு விழா கோலம். - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 May 2024

குடியாத்தம் பகுதியில் புஷ்ப பல்லக்கு விழா கோலம்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருள்மிகு .கெங்கையம்மன் திருவிழா கடந்த மே 14 ம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தார்கள்
இதை அடுத்து நேற்று இரவு 3 புஷ்ப பல்லக்குகள் நகரில் பவனி வந்தது.

இதில் கோபாலபுரம் இளைஞர் மன்றம் சார்பாக ஒரு புஷ்ப பல்லக்கும்
தரங்கம்பேட்டை பூ வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக நடுப்பேட்டை கண்ணகி தெரு காளியம்மன் கோவில் அருகில் ஒரு புஷ்ப பல்லக்கும்
அகமுடையா் இளைஞர்கள் சார்பாக காசி விசுவநாதர் ஆலயம் அருகில் ஒரு புஷ்ப பல்லக்கும்
3 புஷ்ப பல்லக்கும் நகரில் முக்கிய வீதிகளில் விடிய விடிய வீதிஉலா வந்தது
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வீதிகளில் குடும்பத்துடன் அம்மனை தரிசித்தனர்
புஷ்ப பல்லக்கை முன்னிட்டு நடுப்பேட்டை கண்ணகி தெரு வில் இன்னிசை  கச்சேரி நடைபெற்றது.

இதில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளிலும்
மின்சாரத்துறை ஊழியர்கள் கலந்து கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.



No comments:

Post a Comment

Post Top Ad