மயக்க நிலையில் சாலையோரம் இருந்த மாற்றுதிறனாளி மீட்பு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ப்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 17 May 2024

மயக்க நிலையில் சாலையோரம் இருந்த மாற்றுதிறனாளி மீட்பு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ப்பு

வேலூர் மாவட்டம்‌ மே. 17

காட்பாடி வட்டம், காந்திநகர் கல்யாணமண்டபம் அருகே காங்கேயநல்லூர் சாலையில் மாற்றுத்திறனாளியான (45 வயது) மதிக்க தக்க ஆண் ஒருவர் கடந்த இரண்டு நாட்களாக மயக்க நிலையில் இருந்துள்ளார்.  இது தொடர்பாக அப் பகுதி மக்கள் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  
வேலூர் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காட்பாடி ரெட்கிராஸ் தலைவர் ஆர்.கே.கவிதா மற்றும் காட்பாடி வட்டாட்சியர் கோ.சரவணன் அவர்களுக்கு 17.05.2024 பிற்பகல் 12.30 மணியளவில் காட்பாடி ரெட்கிராஸ் சங்க அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தவகல் தெரிவித்தார்.  

அவர்கள் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் எஸ்.சரவணன் அவர்களின் உத்தரவின் பேரில் மயக்க நிலையில் இருந்த மாற்றுத்திறனாளி நபரை  108 ஆம்புலன்ஸ் மூலம் இன்று 17.05.2024 பிற்பகல் 1.45 மணியளவில் மீட்டு வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மீட்பு பணியில் இருந்தவர் முதலுதவி சிகிச்சை அளித்த 108 பணியாளர்கள் பேச்சு கொடுத்த போது அவருக்கு தமிழ் தெரியவில்லை எனவும் சில இந்தி வார்த்தைகள் பேசியதாகவும் இந்தி மொழி பேசுபவர் போல் தெரிவதாக கூறினர். 
காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன், பொருளாளர் வி.பழனி, மக்கள் சேவை சங்க துணைச்செயலாளர் பா.குணாளன் 
காட்பாடி வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், காங்கேயநல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகிருஷ்ணன், உதவியாளர் பிரகாஷ், கழிஞ்சூர் கிராம நிர்வாக அலுவலர் ஆசீர் தங்கராஜ், உதவியாளர் அருள் பேக்கரி உரிமையாளர் அல்லிமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.  
தகவல் பெற்ற ஒரு மணிநேரத்திற்குள் உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபரை மீட்டு மருத்துவமணையில் அனுமதித்த வருவாய்துறையினருக்கும், மாற்று திறனாளிகள் துறையினருக்கும் ரெட்கிராஸ் சங்கத்தினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.



வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்.


No comments:

Post a Comment

Post Top Ad